6 மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்க்கடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளில் உள்ள நாய்களை பிடித்தும், அதனுடைய இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கட்டுப்பாடு செய்தும் வருகின்றனர். ஆனாலும் தெருநாய்கள் ஆக்ரோஷம் குறையாமல் அதிகரித்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், வடசென்னை பகுதியில் அதிகளவில் நாய்கள் தோள்களில் அலர்சியுடன் காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் ரேபிஸ் போன்ற நோய் தொற்று உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். எனவே நாய்களுக்கு தடுப்பூசி அல்லது கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!