கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்… போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… நாகர்கோவிலில் பரபரப்பு…!! Revathy Anish11 July 2024090 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு வழியாக அண்ணா பேருந்து நிலையத்திற்கு 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்களை பேரிகார்டு மூலம் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி ரயில்நிலையம் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை செல்ல அனுமதிக்காததால் அவர்கள் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.