செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள்… செல்போனில் ஆபாச புகைப்படங்கள்… போலீசார் தொடர் விசாரணை…!! Revathy Anish16 July 20240132 views ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்பவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரது செல்போனை சோதனை செய்தபோது அதில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் சத்யாவிற்கு புரோக்கராக செயல்பட்ட கரூரை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரையும் தேடி வருகின்றனர். சத்யாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் 50க்கும் மேற்பட்ட ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சத்யாவை போலீசார் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் காசு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நிரூபித்து விட்டார்கள், என் குடும்பத்தை பற்றி தவறாக எழுதாதீர்கள், நான் வெளியே வந்த பின்பு என் மீது தவறு இல்லை என நிரூபிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தலைமறைவான தமிழ்செல்வியை கைது செய்தால் சத்யா எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.