கொலை வழக்கு… தப்பியோடிய வாலிபர் கைது… தனிப்படையினர் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஷோபி தனது பெற்றோரை பார்ப்பதற்காக சென்னை சென்றிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மகேஷுடைய சகோதரி மகன் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மகேஷ் வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அவர் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். மேலும் மகேஷ் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி ஊருக்கு சென்றதனால் தனியாக இருந்த மகேஷ் அவரது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டு மகேஷை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் திருவிதாங்கோடு மல்லன்விளை பகுதியை சேர்ந்த மெக்கானிக் பெனிட்(27), பெயிண்டர் திரேம்ஸ்(23), பிபின் ஜேக்கப்(23) ஆகிய 3 பேர் கொலையில் சம்மந்தப்பட்டது தெரியவந்த நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பிபின் ஜேக்கப் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தனிப்படையினர் கோவைக்கு சென்று பதுங்கி இருந்த பிபினை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!