செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish6 July 2024069 views தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மணிமாலா அவரது அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னமனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமாலா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.