செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் மாநில தலைவர் கொலை… 6 தனிப்படை அமைத்து விசாரணை… சென்னையில் பரபரப்பு…!! Revathy Anish6 July 2024083 views சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்ஸ்ட்ராங் மீட்டு சென்னை கிரீன்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆம்ஸ்ட்ராங் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? என்றும் எதற்காக கொலை செய்தனர்? என்றும் 6 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில தலைவர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.