செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!! Revathy Anish19 July 20240109 views மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதன் பிறகு விசாரணை நடத்தி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அழகு விஜய்(22), மகாலிங்கம்(54) மனைவி நாகலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் போலீசார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்த பென்னி, கோகுலக்கண்ணன், பரத் ஆகியோரை வைகை ஆற்று பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது இந்த 3 பேரும் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.