செய்திகள் மாநில செய்திகள் நாகர்கோவில் சிறப்பு ரயில்… 3 மாதங்களுக்கு நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!! Revathy Anish29 August 2024034 views தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளின் வசதிக்காகவும், அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 11:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3:45 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். இந்த வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.