89
டெல்லியில் வருகின்ற 27-ஆம் தேதி நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அவர் 27-ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிதி விவகாரம், நிலுவை தொகை போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்போவதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்புகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என கூறப்படுகிறது.