ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் இனி பாரபட்சமே இல்லை… பெண் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…ஒரே நாளில் 80,000 ரூபாய் வசூல்…!! Revathy Anish8 July 2024073 views ஈரோடு மாவட்டம் காவிரி சாலையில் கிருஷ்ணா தியேட்டர் அருகே வடக்கு போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த பெண்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போக்குவரத்து வீதிகளை மீறி வாகனம் ஒட்டியது தெரியவந்தது. மேலும் பெண் வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஹெல்மெட் அணிதல், இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இனிமேல் ஆண்கள், பெண்கள் என்ற பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் நடத்திய சோதனையில் 70 பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து 80,000 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது.