புதிய சட்டங்கள் வேண்டாம்… தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம்… முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…!!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். மேலும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சட்டத்துறை தலைவர் இரா. விடுதலை, இணைச்செயலாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக அரசியல் செய்யும் பா.ஜ.க. அமல்படுத்திய 3 சட்ட திட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை என மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!