கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!! Revathy Anish30 June 2024082 views கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் ஆனந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த மாணவி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் உடனடியாக உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனையடுத்து பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் ஆனந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜீவா ஹட்சனையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். ஜீவா ஹட்சன் இன்று பனி ஓய்வு பெற இறந்தது குறிப்பிடத்தக்கது.