தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு உத்திரபிரதேசம் கோராக்பூரை சேர்ந்த மதுசூதனன் பிரஜாப்தி(30), கியானந்த பிரதாப் கவுத்(22) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்களுக்கு விடுமுறை என்பதால் அப்பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஏறி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையில் இருந்து மானாமதுரை நோக்கி ரயில் தண்டவாள ஆய்விற்க்காக ரயில் எஞ்சின் மட்டும் சோதனைக்காக வந்தது. இந்நிலையில் வாலிபர்கள் நடந்து செல்வதை பார்த்த எஞ்சின் டிரைவர் ஒலி எழுப்பினார். ஆனால் வடமாநில இளைஞர் அங்கிருந்து செல்வதற்குள் எஞ்சின் அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் மதுசூதனன் பிரஜாப்தி, கியானந்த பிரதாப் கவுத் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!