செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் போதுமான கட்டிட வசதி இல்லை… மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish28 June 2024099 views தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் செயல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த பள்ளியில் 4,5,7 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லை எனவும் மாணவர்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் மரத்தடியில் அமர்ந்து படிப்பதால் அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.