தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி துரை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையறிந்த ஆலங்குடி போலீசார் அவரை பிடிக்க சென்ற போது போலீசாருக்கும் ரவுடி துரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது துரை காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் 2022-ல் கொலை செய்யப்பட்ட ரவுடி இளவரசன் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!