விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சடையம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(38) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தங்க பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் செல்போனுக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி வைத்தருந்தார்.
இந்நிலையில் மாணவியின் உறவினர் அந்த செல்போனை வாங்கி பார்த்த போது அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இது குறித்த மாணவியிடம் விசாரித்ததில் ஆசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.