செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் சிறுமி போனில் ஆபாச வீடியோ… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேர் போக்சோவில் கைது…!! Revathy Anish25 July 20240127 views விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அவரது தாயார் செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அதே பகுதியில் சேர்ந்த ராஜேஷ்(22) என்பவர் சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி ஆபாச படம் பார்த்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவிப்பதாக ராஜேஷ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜேஷ் மற்றும் அதே பகுதி சேர்ந்த சசிகுமார்(24) இருவரும் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்த நிலையில் அவர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையின் சசிகுமார் மற்றும் ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.