“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நோட்டீசை முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளனர்.

அதன் பிறகு ஆக்கிரமிப்பு செய்ததால் இடிக்கப்பட்டதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அந்த நோட்டீஸில் தனது இடத்தின் சர்வே எண்ணும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் சர்வே எண்ணும் வேறு வேறு என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அதிகாரிகள் புறப்பட்டு சென்று விட்டனர். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

“காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!!

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!