ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்… மங்கலம் சாலையில் பரபரப்பு…

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின்படி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் படி அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!