ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!!

சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்பட 8 பேர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

இதனையடுத்து பொதுமக்களிடம் கோட்டாட்சியர் இப்ராகிம், பொறியாளர் தயாளன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இதற்கு பின்னர் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் உடைத்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காவல்துறையினர் ஏரளாமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!