கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் கள்ளசாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… வெளியான தகவல்…!! Revathy Anish17 July 20240222 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது வரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உட்பட ஏழு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.