கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு… புழல் சிறையில் அடைத்த போலீசார்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி ரவுடியின் அஞ்சலை என்பவர் தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி அஞ்சலை மீது கடந்த மே மாதம் 9-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் முகமது அசாருதீன் தொழில் ஆரம்பிப்பதற்காக அஞ்சலை மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அந்த பணத்திற்கு வட்டியுடன் சுமார் 66 லட்சம் ரூபாய் வரை அசாருதீன் அஞ்சலைக்கு கொடுத்தார். ஆனாலும் அஞ்சலை மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் முகமது ஆசாருதீனிடம் இன்னும் பணம் வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் தலைமறைவான அஞ்சலையை தேடி வந்தனர். தற்போது அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில், இந்த வழக்கையும் அவர் மீது பதிவு செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஞ்சலையை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதான அஞ்சலை மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!