செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் கடனால் ஏற்பட்ட வேதனை… குழந்தைகளுடன் தந்தையின் விபரீத முடிவு… நெல்லை அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024075 views திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக ரமேஷ் தனது மனைவி உமாவை 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு தனது பிள்ளைகளான ராபின்(14) மற்றும் காவியா(11) ஆகியோரை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் வீட்டு செலவுகளை சமாளிக்க கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து பணத்தை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் ரமேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஏற்கனவே அவர் மனைவியை பிரிந்து வேதனையில் இருந்து வந்த நிலையில் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வெகு நேரமாகியும் ரமேஷ் மற்றும் அவரது குழைந்தைகள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அப்போது ரமேஷ் மற்றும் குழந்தைகள் வாயில் நுரையுடன் உயிரிழந்து காணப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷ், ராபின், காவியா ஆகியோரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடன் தொல்லை மற்றும் மனைவியின் பிரிவை தாங்க முடியாததால் ரமேஷ் வாழைப்பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டு அவரது பிள்ளைகளுக்கும் கொடுத்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.