100 அடியை தொட்ட பாபநாசம் அணை…மாஞ்சோலைக்கு செல்ல தடை… வனத்துறை அறிவிப்பு…!!

கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்காசி, பாபநாசம் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு 86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது.

மேலும் மணிமுத்தாறு அணையில் 78.64 அடியாகவும், சேர்வலாறு அணையில் 114 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனத்துறையின் அடுத்த அறிவிப்பு வரும் வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!