காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… கல்லூரி மாணவரின் விபரீத செயல்… போலீசார் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் கல்லாவி சுரத்தூர் பகுதியில் பகுதியில் சிவாஜி(19) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் ஓசூரில் செம்படைத்தெருவில் பெற்றோருடன் வசித்து அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிவாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சிவாஜி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் மகனை உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!