செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!! Revathy Anish22 July 20240104 views திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து முன்பகுதி முழுவதும் சேதமடைந்து, டிரைவர் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து அடைந்த அரசு பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.