மாணவர் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று சான்றிதழின் பின்புறத்தில் கட்டண பாக்கியை குறிப்பிட தடை விதிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டண பாக்கியை குறிப்பிடும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கட்டண பாக்கி உள்ளது என சான்றிதழ்களில் குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாற்றுச் சான்றிதழ்கள் பெற்றோரிடம் இருந்து கட்டண பாக்கியை வசூலிக்கும் கருவி அல்ல, கட்டண பாக்கி காரணத்தால் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க செய்வது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும் என்றும் தெரிவித்தனர்.