மக்களை காப்பாத்தணும்… தி.மு.க அரசு மீது விமர்சனம்… எல். முருகன் பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் பா.ஜ.க சார்பில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசும் போது, நாட்டின் மீது தொடர்ந்து பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதால் மக்கள் 3-வது முறையாக அவரை பிரதமராக்கி உள்ளனர். இது ஒரு சரித்திர நிகழ்வாகும். இதனையடுத்து மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்த மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய தேயிலை போன்ற பொருள்கள் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு, துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இதனால் தேயிலை பொருட்களின் வருமானம் அதிகரிக்கும். என கூறினார். இதனையடுத்து அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் இல்லை என்று கூறி அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது, எனவே அந்த நீரை அவிநாசி அத்திக்கடவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. சாதாரண பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே தீர்வு காண முடியும் என எல். முருகன் கூறியுள்ளார்

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!