செய்திகள் மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் சவுடு மணல் அள்ளிய நபர்கள்… 3 பேர் அதிரடி கைது… டிராக்டர்கள் பறிமுதல்…!! Revathy Anish24 July 20240139 views மயிலாடுதுறை மாவட்டம் நத்தம் பகுதியில் மாவட்ட சூப்பிரண்டு மீனா தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செந்தில்குமார், ஆலவெளி பகுதியை சேர்ந்த கார்த்திக், நாகராஜன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 டிராக்டர்கள், ஹிட்டாச்சி இயந்திரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.