பாலியல் வழக்கில் கைதான நபர்… பண மோசடி வழக்கும் பதிவு… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர், முதல்வ,ர் ஆசிரியர்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டது சிவராமன் மீது பண மோசடி செய்யப்பட்ட வழக்கு பதிவாகியுள்ளது. அதில் சிவராமன் தன்னை வழக்கறிஞர் என கூறிக்கொண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரிடம் சுமார் 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். மேலும் அவர் போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்து கொடுத்ததும், போலி ரசீது தயார் செய்து பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!