பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் டமோயோ பெர்ரி. கடல் அலை சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது சாகசங்களை செய்து வருவார். இந்நிலையில் இவர் ஹவாய் தீவில் உள்ள கோட்ட தீவு கடலில் அலைசறுக்கு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது சுறா ஒன்று நடிகர் பெர்ரியை தாக்கியுள்ளது.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். ஆனால் சுறா தாக்கியதில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்தவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.