தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் மின்சார கட்டண உயர்வு ஏழை மக்களையும் தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மின்சார கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.