பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் பா.ம.க. பிரமுகராகவும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புறம் மனைவியுடன் பேசி கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை திடீரென கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனை பார்த்து அலறிய அவரது மனைவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சங்கரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சங்கருக்கும் அதே பகுதியை சேர்த்த தங்கபாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 2021-ல் சங்கரின் தம்பி பிரபுவை கொலை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக சங்கரையும் கொலை செய்ய முடிவெடுத்த உறுதியாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் சங்கரை தாக்கிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுவதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!