குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு… கணவன்-மனைவி பலி…!!

சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவேங்கடம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக வெளியூர் செல்ல இருந்த நிலையில் சவுமியாவை சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் சவுமியா கடந்த 7-ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் இனியவன் திடீரென மருந்து இல்லாத வெற்று ஊசியை தன் உடலில் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சொந்த ஊரான சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த இனியவன் குளுக்கோஸ் பாட்டிலில் விஷம் கலந்து அதை தன் உடலில் செலுத்திக்கொண்டு உயிரிழந்தார். இதனையடுத்து அம்மாபேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மீனம் ராசிக்கு…! தாராளமான பணவரவு கிடைக்கும்…!! வியாபாரத்தில் வளர்ச்சி நிலை இருக்கும்…!!

துலாம் ராசிக்கு…!! அற்புதமாக சிந்தித்து வெற்றி காண்பீர்கள்…!! குழப்பமான மனநிலை நீங்கும்…!!

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!