செய்திகள் மாநில செய்திகள் ரவுடி அஞ்சலையை புழல் சிறையில் அடைத்த போலீசார்… வங்கி கணக்கு விபரங்கள் குறித்து ஆய்வு…!! Revathy Anish21 July 20240161 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அஞ்சலையை ஓட்டேரியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 10 ரவுடிகள் சம்மந்தப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களையும் தேடி வருகின்றனர். இதனையடுத்து அஞ்சலையை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அஞ்சலையை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் அஞ்சலையை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது கொலைக்கு சதித்திட்டம் திட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது வங்கி கணக்கு குறித்த விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.