Home செய்திகள் துப்பாக்கியுடன் பணிபுரியும் போலீஸ்… டி.ஜி.பி. உத்தரவு… ரவுடிகளை கண்காணிக்கும் அதிகாரிகள்…!!

துப்பாக்கியுடன் பணிபுரியும் போலீஸ்… டி.ஜி.பி. உத்தரவு… ரவுடிகளை கண்காணிக்கும் அதிகாரிகள்…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்தில் கொலை மற்றும் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கூடுதல் சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பணியின் போது துணை சூப்பிரண்டு அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கை துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும், தலைமை ஏட்டுகள், ஏட்டுகள் ஆகியோர் லத்தி வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவ்வகையில் தமிழக முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணி செல்லும் போது, போராட்டங்கள் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது, அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கையில் துப்பாக்கி வைத்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.