போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!!

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்ப முயன்ற ரவுடி சேதுபதியை போலீசார் வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!