கடலூர் சென்ற நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கிறது. பெரிய திரைப்படங்கள் திரைக்கு வர இருப்பதால், அவர்கள் இப்போதே தியேட்டர்களை எடுத்து விட்டார்கள். இதனால் சிறிய படங்கள் திரைக்கு வருவது கேள்விக்குறி ஆகிவிட்டது. எனவே சினிமாவிற்கு கஷ்டமாக நிலையாக உள்ளது.
இதனையடுத்து அரசாங்கம் ஏன் சினிமாவிற்குள் வருகிறது, சென்ற அரசு அப்படி இல்லையே, அரசு தங்களுடைய கடமையை செய்தாலே போதும், சினிமா துறை நன்றாக இருக்கும் என விஷால் கூறினார். தற்போது அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆகிவிட்டார்கள் அப்படி இருக்கும் போது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார். மேலும் அவர் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது, நான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் முடிவு செய்தால் அரசியலில் இறங்குவேன் என தெரிவித்தார்.