செய்திகள் மாநில செய்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி கைது… இதுவரை 24 பேரை பிடித்த போலீசார்…!! Revathy Anish19 August 20240117 views சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் பல ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பொற்கொடி 1.5 லட்சம் ரூபாயை பொன்னை பாலுவுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்தது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை 24 பேர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.