உலக செய்திகள் செய்திகள் அதிபர் தேர்தல் விவாதம்…. ட்ரம்பிடம் திணறிய ஜோ பைடன்….!! Revathy Anish29 June 20240121 views அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியும் போட்டியிட இருக்கின்றது. ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கு இடையேயான நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விவாதம் நடைபெற்றது. ஆனால் இந்த விவாதத்தில் ட்ரம்பிடம் விவாதிக்க ஜோ பைடன் திணறியதாக கூறப்படுகிறது. அமெரிக்க வாக்காளர்களிடம் மெசேஜ் மூலம் வாக்கெடுத்த போதும் ட்ரம்ப் தான் வெற்றி பெற்றதாக 67 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். மீதி 33 சதவீதத்தினர் தான் ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே ஜனநாயக கட்சி மூத்த நிர்வாகிகள் ஜோ பைடனை மாற்றிவிட்டு வேறு யாரையாவது தேர்தலில் நிற்க வைக்கலாமா என்று சிந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.