கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் செல்போன் மோகத்தால் பிரச்சனை… விபரீத முடிவு எடுத்த மாணவி… குமரி அருகே சோகம்…!! Revathy Anish12 July 20240132 views கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார். ஆனாலும் அக்ஷயா கேட்காமல் வெகு நேரம் செல்போனிலேயே மூழ்கி இருந்தார். இதனை பார்த்த நிர்மலா அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அக்ஷயா வீட்டில் யாரும் பார்க்காத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் அக்ஷயா தனது அறையில் மயங்கி கிடப்பதை கண்ட நிர்மலா அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அக்ஷயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.