தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகா கபினி மற்றும் கிருஷ்ணராஜ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிஅருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஏற்கனவே ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதித்திருந்த விதிக்கப்பட்டது. தற்போது 11-வது நாளாக அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் செல்லாத வகையில் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதினால் நீர்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.