தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மத்திய பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாவட்டம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இந்திய கூட்டணி கட்சியினர் ஆதரவு அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.