ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்ந்து பிடிபடும் ரவுடிகள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமுறைவாக இருந்த பெண் தாதா, பாஜக பிரமுகருமான அஞ்சலையை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளும், பி. வகை ரவுடி பட்டியலில் அஞ்சலை பெயர் இருந்து வருகிறது.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு அஞ்சலை 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகளுக்கு வெளியே இருந்து பண உதவி செய்வது, தகவல் தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட சென்னையாக ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவர் பிடித்து போலீசார் நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியதாகவும், அதற்க்கான உத்தரவுகளை சம்போ செந்தில் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஹரிஹரனுக்கு வழங்கியதும் தெரியவந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடரி வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் 2 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!