ரேஷன் கடைகள் நாசம்… காட்டு யானைகளின் அட்டகாசம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் கெத்தை வனப்பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடியது. இதனையடுத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அடுத்துள்ள கொலகம்பை பகுதிக்கு சென்று பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை தின்றது.

மேலும் ரேஷன் கடையில் இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கி சென்றது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் ஊருக்கு தீப்பந்தத்துடன் சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வன விலங்குகள் ஊருக்கு வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளன.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!