Home » அனுமதியின்றி சென்ற அகதிகள்… 22 மீனவர்கள் கைது…உளவுத்துறை விசாரணை…!!

அனுமதியின்றி சென்ற அகதிகள்… 22 மீனவர்கள் கைது…உளவுத்துறை விசாரணை…!!

by Revathy Anish
0 comment

பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த பலரும் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையில் கடுமையான பெருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மேலும் 300 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒரு கட்டுப்பாடாக அவர்கள் கச்சத்தீவிற்கு செல்வதற்கும், மீன்பிடிக்க செல்வதற்கும் தடை வித்திக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று 22 மீனவர்கள் ராமேஸ்வரம் கடலில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மீன்பிடிக்க சென்ற 22 பேரில் தீபன்(35), மற்றும் சுதாகர்(42) ஆகிய 2 பேரும் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் எனவும் அவர்களிடம் மீன் பிடிப்பதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமல் விதிகளை மீறி கடலுக்கு வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி மீன்பிடிக்க வந்த அகதிகள் குறித்து இந்திய தூதரகத்தில் தகவல் தெரிவித்தனர். மேலும் விதிகளை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அகதிகளை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும், அவர்கள் மீன்பிடிக்க செல்ல உதவியாக இருந்த நபர்கள் குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.