செய்திகள் மாநில செய்திகள் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு… நேரில் ஆஜராக உத்தரவு… 22-ஆம் தேதி விசாரணை…!! Revathy Anish18 July 2024080 views சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வங்கி அளித்துள்ள ஆவணங்களும் அமலாக்க துறை வழங்கிய ஆவணங்களும் வேறுபாடு இருப்பதாக முதல் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பார்த்த நீதிபதி இந்த ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என உத்தரவிட்டார். மற்றொரு மனுவில் செந்தில் பாலாஜியின் மீதான இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வாதங்களை மீண்டும் முன் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை நாங்கள் முன்னதாகவே வழங்கியுள்ளோம், ஆகவே வழக்கை இழுத்தடிக்கும் வகையில் செந்தில் பாலாஜி தரப்பினர் செயல்படுவதாக கூறினார். இதனையடுத்து 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் பாலாஜியை விடுவிப்பதற்கான மனுவை தள்ளுபடி செய்து அவரை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 22 ஆம் நடைபெறும் குற்றசாட்டுகள் பதிவுக்கான விசாரணையில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.