செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் விடுதிக்கு அனுப்ப மறுப்பு… விபரீத முடிவு எடுத்த இளம்பெண்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish14 July 2024075 views சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் பிரகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு சந்தான பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் அஸ்வந்தினி ராமாபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது 2-வது மகள் ஆனந்தினிக்கு வேலூர் தனியார் கல்லூரியில் சீட் கிடைத்ததால் பெற்றோர் அவரை விடுதியில் சேர்ப்பதற்காக வேலைகளை செய்து வந்தனர். அப்போது அஸ்வந்தினி தானும் விடுதிக்கு சென்று படிக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் அருகில் இருக்கும் கல்லூரி படிக்கும்போது ஏன் விடுதியில் தங்க வேண்டும் என கூறி மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அஸ்வந்தினி 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வந்தினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வந்தினி ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.