செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் சீரான விமான சேவைகள்… வெளிநாடுகளுக்கு சேவைகள் தொடங்கப்படுமா… அதிகாரிகள் ஆலோசனை…!! Revathy Anish20 July 2024096 views மைக்ரோசாப்ட் இணைய சேவை கோளாறு காரணமாக நாடு முழுவதிலும் நேற்று மென்பொருள் நிறுவனங்கள், விமான சேவைகள் கடும் பாதிப்படைந்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் மதுரையில் இருந்து புறப்படக்கூடிய விமானம் மற்றும் வந்து சேரக்கூடிய விமானம் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று 2 விமானங்கள் வருகை மற்றும் 2 விமானங்கள் புறப்பாடு என 4 விமான சேவைகள் தாமதமானது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் இணையதள சேவை சீரானதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் வழக்கம்போல புறப்படக்கூடிய விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட்டது. மேலும் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை தொடங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.