செய்திகள் தேசிய செய்திகள் கிணற்றுக்குள் இறங்கிய உறவினர்கள்… 5 பேர் பரிதாபமாக பலி…விஷவாயு தாக்கியதால் சோகம்…!! Revathy Anish6 July 2024083 views சத்தீஸ்கர் மாநிலம் கிக்ரிடா கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர ஜெய்ஸ்வால். இன்று காலை ஜெய்ஸ்வால் கிணறு ஒன்றிற்குள் கிடந்த மரக்கட்டையை எடுப்பதற்காக இறங்கியுள்ளார். ஆனால் உள்ளே சென்றவருக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. அதனால் உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகே இருந்த உறவினர்கள் மூன்று பேர் அவரை காப்பாற்றுவதற்கு கிணற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களும் மயக்கம் அடைந்துள்ளனர். கிணற்றிற்குள் இறங்கியவர்களை காணாததால் வெளியே நின்று கொண்டிருந்த சந்திரா என்பவரும் கிணற்றில் இறங்க அவரும் மயக்கம் அடைந்துள்ளார். இது குறித்து ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றிலிருந்து ஐந்து பேரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிணற்றுக்குள் விஷவாயுவை சுவாசித்ததால் ஐவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.